திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (15:52 IST)

திட்டமிட்டு நாமினேட் செய்த ஹவுஸ்மேட்ஸ் - வனிதாவுக்கு பேராதரவு கொடுக்கும் மக்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு வனிதாவை நாமினேட் செய்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் வனிதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


 
இதில் முதலாவதாக தர்ஷன் வனிதாவை நாமினேட் செய்கிறார். அதற்கான காரணம், அடுத்தவங்க விஷயத்துல எல்லாம் மூக்கை நுழைத்து எதுவுமே இல்லாத பிரச்சனையை ஊதி பெருசாக்கிட்டு இருகாங்க என்று கூறுகிறார். அடுத்தடுத்த ஆளாக சாண்டி, முகன் இருவரும்  வனிதாவை நாமினேட் செய்தனர். 
 
பின்னர் கடைசியாக வந்த வனிதா தர்ஷனை நாமினேட் செய்கிறார். ஏனென்றால் எதிர்காலத்தில் நாமினேஷன் லிஸ்டில் தர்ஷன் வருவாரா என்றே தெரிவில்லை என காரணத்தை கூறுகிறார். வனிதாவை வேண்டுமென்றே பிளான் செய்து அனைவரும் நாமினேட் செய்துள்ளனர். இதனை கண்ட நெட்டிசன்ஸ் வனிதாவுக்கு டைட்டில் கார்ட் தகுதி இல்லை தான். ஆனாலும் கடைசிவரை பிக்பாஸ் வீட்டில் வனிதா இருந்தால் மட்டும் தான் அவர்களை அடக்கி வைக்கமுடியும். வனிதா தான் அவர்களுக்கு சரியான ஆள் என்று கூறி வனிதா ஓட்டளிக்க சொல்லி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.