புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (17:53 IST)

புஷ்பா உடம்பா இது...! ரசிகர்களை வாய்பிளக்க வாய்த்த பிக்பாஸ் ரேஷ்மா!

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது. 


 
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. 
 
ஆனால், ஒரு சில வாரங்களிலேயே மக்களின் ஓட்டுக்களை இழந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதையடுத்து சமீப நாட்களாக போட்டோ ஷூட் நடத்தி வரும் ரேஷ்மா தற்போது  சிவப்பு நிற சேலை அணிந்துகொண்டு நடத்தியுள்ள போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு ரசிகர்கள் விதவிதமாய் கமெண்ட்ஸ்களை தெரிவித்துள்ளதை நீங்களே பாருங்ககள்.