சரியான நேரத்தில் உண்மையை உடைத்த மது - நிச்சயம் சேரன் தான் டைட்டில் வின்னர்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்று முன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் போட்டியின்றி லொஸ்லியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தர்ஷன் விட்டு கொடுத்ததற்காக அவரிடம், " ஏன் எனக்கு தியாகம் செய்தாய்? இதையே நாங்கள் நீ ஜெயக்கனும்னு சொன்னபோது எனக்கு இந்த தியாகமெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்போ எனக்கு மட்டும் எதற்கு? என லொஸ்லியா கேட்க அதற்கு தர்ஷன், நான் தியாகம் செய்யவில்லை இந்த வாரம் முழுக்க ஒரு தலைவராக என்ன செய்யணுமோ அதை நீ செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கி ஃபைனல்ஸ் வரை வரவேண்டும். நான் சேஃப் ஆகத்தான் இருக்கிறேன் என்று லொசலியாவுக்கு அட்வைஸ் செய்கிறார் தர்ஷன்.
இவர்கள் பேசுவது அனைத்தையும் சேரன் ரகசிய அறையில் அமர்ந்துகொண்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது மதுமிதா முதன்முறையாக பிக்பாஸில் நடந்த அக்கிரமகங்களை பேட்டியில் தெரிவித்துள்ளதால் சேரன் தவிர மற்ற அனைவர் மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர்.
ஆகவே இந்த நேரத்தில் மதுமிதா பேட்டியளித்தது சரி தான். சேரனை தவிர வேறு யாருக்கும் ஓட்டளிக்கக்கூடாது என்பதில் மக்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர்.