விஷாலுக்கு ஜோடியான டப்ஸ்மாஷ் பிரபலம்! ஆச்சர்யத்தில் திரையுலகினர்!

Last Modified செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:22 IST)

நடிகர் விஷால் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நாயகியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருனாளினி ரவி நடிக்க உள்ளார்.

விஷால் நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கும் புதிய படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இருவரும் இரும்புத்திரை படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்தார்

இந்த படத்தின் கதாநாயகியாக டப்ஸ்மாஷ் பிரபலம் மிருனாளினி ரவி நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே விஷால் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்புக் கிடைத்தது குறித்து திரையுலகினர் ஆச்சர்யமடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :