ரஜினியால் தாமதமாகும் லிங்குசாமியின் அடுத்த படம்?

lingusamy
ரஜினியால் தாமதமாகும் லிங்குசாமியின் அடுத்த படம்?
siva| Last Modified வியாழன், 8 அக்டோபர் 2020 (18:04 IST)
ராம்சரண் தேஜா, சமந்தா நடிப்பில் தெலுங்கில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் ரங்கஸ்தலம் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை உருவாக்க இயக்குனர் லிங்குசாமி கடந்த சில மாதங்களாக முயற்சி செய்துவந்தார்

இந்த படத்தின் முக்கிய வேடத்தில் ராகவா லாரன்ஸும், சமந்தா படத்தில் சமந்தாவே நடிக்கவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே லிங்குசாமி இயக்கிய ‘அஞ்சான்’ படத்தில் சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ’லட்சுமி பாம்’ படத்தை முடித்துவிட்ட ராகவா லாரன்ஸ் ’சந்திரமுகி 2’ படத்தின் பணிகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லிங்குசாமியின் ரங்கஸ்தலம் ரீமேக் படம் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது
அண்ணாத்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் ’சந்திரமுகி 2’ படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் எனவே இந்த படத்தை முடித்துவிட்டுதான் தன்னால் ரங்கஸ்தலம் ரீமேக்கில்
நடிக்க வர முடியும் என்றும் ராகவா லாரன்ஸ் கூறியதால் லிங்குசாமி தரப்பினர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :