ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி – வைரலாகும் புகைப்படம்!

Last Modified திங்கள், 12 அக்டோபர் 2020 (15:55 IST)

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன் மற்றும் ரீமாசென் ஆகியோர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது.

செல்வராகவனின் படங்கள் சில காலம் கடந்தும் ரசிகர்களின் பாரட்டுகளை பெறுபவை. அந்த வகையில் அவர் இயக்கிய புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரு படங்களும் ரிலீஸின் போது வெற்றி பெறாவிட்டாலும் அதன் பின் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு கொண்டாடப்பட்டவை.

அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு ரி ரிலிஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் உருவாக்கத்தின் போது படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற ரஜினி படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :