10 வருடமாக ரஜினியைப் பார்க்க காத்திருந்த நடிகர்! தொலைபேசியில் உறுதியளித்த சூப்பர் ஸ்டார்!

Last Updated: திங்கள், 12 அக்டோபர் 2020 (11:15 IST)


நடிகர் கிங் காங் தான் தேசிய விருது பெற்றதை அடுத்து அந்த விருதோடு நடிகர் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டிள்ளார்.

நடிகர் கிங் காங் நடிகர் ரஜினி நடித்த அதிசயப் பிறவி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பிரேக் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ இன்றளவும் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத் திறனாளியான அவர் சினிமா துறையில் சாதித்ததற்காக 2009 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.

இதையடுத்து தன் முதல் படத்தின் நாயகன் ரஜினியோடு அந்த விருதோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அது நடக்கவில்லை. இது பற்றி இணையதள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அது எப்படியோ பரவி ரஜினிக்கு சென்றுவிட கிங்க் காங்குக்கு போன் செய்து பேசியுள்ளார் ரஜினி.

அப்போது கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பின்னர் கண்டிப்பாக சந்திக்கலாம் என ரஜினி உறுதியளித்துள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :