அஜித் கூட நடிக்க ஆசைப்பட்ட ரஜினி மகள்… ஆனால் கடைசி வரை நிறைவேறாத ஆசை!

Last Modified வியாழன், 8 அக்டோபர் 2020 (11:31 IST)

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாக பல ஆண்டுகளுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினியின்
இரண்டு மகள்களும் சினிமாவில் இயக்குனர்களாக இப்போது இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினியின் இளையமகளான சௌந்தர்யாவிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் நீங்கள் நடிக்க ஆசைப்பட்டால் யாருடன் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் ‘எனக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும்.
அவருடன் இணைந்து நடிக்க நான் மிகவும் விரும்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் அவரின் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவேயில்லை. ஆனால் சௌந்தர்யா கோச்சடையான் மற்றும் விஜபி 2 ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள நிலையில் விரைவில் அஜித்தை வைத்தும் ஒரு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :