வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:20 IST)

டாக்டரும் இல்ல.. நர்ஸும் இல்ல.. அனாமத்தாக கிடந்த நோயாளிகள்! – கான்பூர் மருத்துவமனை மீது வழக்கு!

உத்தர பிரதேசம் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கவனிக்க மருத்துவர், செவிலியர் இல்லாதது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் போதிய வசதி இல்லாதது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் கான்பூரில் உள்ள நாராயணா மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான மருத்துவமனையில் மருத்துவ துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மருத்துவமனை வசதிகள் சரியாக இல்லாததுடன், கொரோனா வார்டுகளில் நோயாளிகளை கவனிக்க மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோர் இல்லாததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகள் அலட்சியம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.