1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:26 IST)

சொந்த இடத்திலேயே தகனம் செய்து கொள்ளுங்கள்: கர்நாடக அரசு வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தால் அவர்களை சொந்த இடத்திலேயே தகனம் செய்து கொள்ள கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியாகி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பெங்களூரில் சுடுகாட்டில் நீண்ட வரிசையில் பிணங்கள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் டோக்கன் கொடுத்து டோக்கன் வாரியாக பிணங்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உறவினர் விரும்பினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அவர்களது சொந்த இடத்திலேயே தகனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் சொந்த இடத்தில் தகனம் செய்யும் போது மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது