திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (17:48 IST)

இளையதலைமுறை அரசியல்வாதிகளுக்கு சிறந்த முன்னுதாரணம்: உதயநிதி புகழாரம்

சுதந்திரப்போராட்ட வீரரும்,மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத்தலைவர்களில் ஒருவருமான சங்கரய்யா அவர்களின் 99வது பிறந்தநாள் இன்று தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, சங்கரய்யாவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் இளையதலைமுறை அரசியல்வாதிகளுக்கு சிறந்த முன்னுதாரணம் என்று புகழாராம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான தோழர் சங்கரய்யா அவர்களை, அவரது 99-வது பிறந்த நாளில் வாழ்த்தி வணங்குகிறேன். சிறை, மக்கள் பணி என தியாக வாழ்வு வாழும் சங்கரய்யா அவர்கள் இளைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணம்
 
முத்தமிழறிஞர் கலைஞரின் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் பார்த்த சங்கரய்யா அவர்கள், சமூக ஏற்றத்துக்காக தன் சமகாலத்தில் உழைத்த தோழனை உணர்ச்சிபொங்க வீரவணக்கம் சொல்லி வழியனுப்பிவைத்தார். அக்காட்சிகளை பின்னர்பார்த்தபோது பேச வார்த்தைகளற்று போனேன். தோழர் சங்கரய்யா அவர்களின் புகழ் ஓங்குக