திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 11 ஜூலை 2020 (22:16 IST)

கொள்ளைப்புற அடிமைகளால் உரிமைக்கு ஆபத்து – உதயநிதி

தமிழக எதிர்க்கட்சித் தலைவரின் மகனும், திமுக இளைஞரணி அணி செயலாளருமான உதயநிதி,  வெள்ளையருக்கு மண்டியிடாத மாவீரன் அழகு முத்துக்கோன் வீரமரணம் எய்திய தியாகத் திருநாளாம்  இன்று (ஜூலை11 ) முன்னிட்டு  அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது : 
மாவீரன் அழகுமுத்துக்கோனை நேரே சந்திக்க துணிச்சலற்ற வெள்ளையரின் அடிமைப்படை இதே நாளில் சூழ்ச்சியால் வீழ்த்தி பீரங்கி வாயில் உடலைக் கட்டி சிதறடித்தது. அன்று வெள்ளையரின் அடிமைகளால் மண்ணுக்கு சிக்கல் வந்தது போல் இன்று கொள்ளைப்புற அடிமைகளால் உரிமைக்கு ஆபத்து வந்துள்ளது. முறியடிப்போம்! என தெரிவித்துள்ளார்.