லைகாவின் அடுத்த தயாரிப்பில் மீனா?

Meena
Last Modified திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (17:13 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்', உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2', சூர்யா நடித்த 'காப்பான்', மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' உள்பட பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனம் வேறு சில நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து வரும் நிலையில் தற்போது புதியதாக வெப் சீரிஸ் துறையில் காலடி வைக்க உள்ளது

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ்ஸில் நடிகை மீனா முக்கிய வேடத்டில் நடிக்க உள்ளார். திரைப்படங்களில் இருந்து கிட்டத்தட்ட ஒதுங்கியுள்ள மீனாவை மீண்டும் வெப் சீரீஸ் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பெருமையை லைக்கா நிறுவனம் பெறுகிறது

இந்த வெப்சீரீஸ்ஸை அருண்விஜய் நடித்து வரும் 'பாக்சர்' படத்தை இயக்கி வரும் விவேக் என்பவர் இயக்க உள்ளார். ஜீதமிழ் தொலைக்காட்சிக்காக உருவாக்கப்படும் இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. த்ரில், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான தொடராக உருவாகவிருக்கும் இந்த வெப் சீரீஸ், மீனாவின் ரசிகர்களுக்கு நல்ல விருந்து அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :