டி.என்.பி.எல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!

Last Modified திங்கள், 22 ஜூலை 2019 (08:00 IST)
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் போலவே டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணியும், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் மோதின

இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லைக்கா கோவை கிங்ஸ் அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இதில் கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் அபிநந்தன் மிக அபாரமாக விளையாடி 70 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

இந்த வெற்றியை அடுத்து லைக்கா கோவை கிங்ஸ் அணி 2 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :