மாநாடு டிராப்பா ? – கொந்தளித்த தயாரிப்பாளர் !

Last Updated: சனி, 20 ஜூலை 2019 (16:34 IST)
மாநாடு படம் கைவிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து அதுக் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருப்பதாக 'மாநாடு' என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாராக வைத்திருந்தார் என்றும், இதனால் எந்த நேரத்திலும் இந்த படத்தின் படக்குழுவினர் மலேசியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க சிம்பு ஒரு சில நிபந்தனைகளை விதித்ததாகவும், சிம்புவை இயக்க வெங்கட் பிரபு சில நிபந்தனைகள் விதித்ததாகவும் இரண்டு பேர்களின் நிபந்தனைகளை கேட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அம்மன் நொந்து போனதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சிம்பு கன்னட ரீமேக் படம் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்று விட்டா.ர் அதனால் வெறுத்துப்போன வெங்கட்பிரபுவும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். வெப்சீரீஸ் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் படம் டிராப் ஆகிவிட்டது என சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாக அதைப்பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொந்தளித்துள்ளார்.
 
தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஒவ்வொரு நாளும் மாநாடு படம் டிராப்பாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. உங்களால் இந்தப் படத்தை நிறுத்த முடியாது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முழு மும்முரமாக நடந்து வருகின்றன’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :