1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (14:24 IST)

சன் டிவியில் மாஸ்டர் ஒளிபரப்பு… எப்போது தெரியுமா?

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று இருக்கும் என சொல்லப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் அந்த விதியைக் கடைபிடிக்காமலும் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் சில நாட்கள் கூட்டத்துக்கு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும் ஓடாத படத்தை ஓடியதாக பொய்க் கணக்கு காட்டுவதாகவும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளதாக சொல்லப்படுகிறது.