1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (08:44 IST)

10 வாரங்கள் ஆகியும் இன்னும் 50 திரையரங்குகளில் ஓடும் ‘மாஸ்டர்’

master ott
10 வாரங்கள் ஆகியும் இன்னும் 50 திரையரங்குகளில் ஓடும் ‘மாஸ்டர்’
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த படம் வெளியாகி 15 நாட்களில் ஓடிடியிலும் வெளியானது என்பது தெரிந்ததே இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் ஆனது என்பதும் அது மட்டுமின்றி ஓடிடியில் மட்டும் தனியாக 50 கோடிக்கு மேல் வசூல் ஆனதாகவும் மொத்த வசூல் ரூபாய் 300 கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி அதிகபட்சம் பத்து அல்லது பதினைந்து நாட்களில் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டு வருவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 10 வாரங்கள் ஆன பின்னரும் இன்னும் 50 தியேட்டர்களில் தமிழகத்தில் இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது
 
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்னர் வேறு பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் இன்னும் 50 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது