திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (10:54 IST)

வருகிறது பாகுபலி 3… ராஜமௌலியின் அடுத்த திட்டம்!

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோர் நடிப்பில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை இந்தியா முழுவதும் பெற்றன. தமிழகத்தில் திரையரங்குகள் மூலம் அதிக வசூல் செய்த படமாக பாகுபலி 2 உள்ளது.

இந்நிலையில் இப்போது பாகுபலி 3 ஆம் பாகம் உருவாவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை ராஜமௌலியே 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளாரம். நெட்பிளிக்ஸில்  9 எபிசோட்களைக் கொண்ட அனிமேஷன் தொடராக இது வெளியாகும் என சொல்லப்படுகிறது.