1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 21 மார்ச் 2021 (19:14 IST)

யூடியுபில் ‘வாத்தி கம்மிங்’ செய்த சாதனை: டிரெண்டாக்கிய விஜய் ரசிகர்கள்!

யூடியுபில் ‘வாத்தி கம்மிங்’ செய்த சாதனை:
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் ரூபாய் 200 கோடிக்கு அதிகமாகவும் ஓடிடியில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததால் மொத்த வசூல் 300 கோடி என்றும் கூறப்பட்டது 
 
மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் சிறுவர் முதல் பெரியோர் வரை ஆட்டம் போட வைத்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் வாத்தி கம்மிங் பாடல் யூடிபில் புதிய சாதனை செய்துள்ளது. இந்த பாடலுக்கு 100 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.  இது குறித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.
 
ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியாகி ஒரு சில மாதங்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்களை கிடைத்துள்ளது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் என்று திரையுலகினர் கூறிவருகின்றனர். அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் இன்னும் பல மாதங்களுக்கு டிரெண்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது