புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2020 (14:33 IST)

வேற லெவலில் "மாஸ்டர்" செகண்ட் சிங்கிள்... ஒரே டேக்கில் டப்பாங்குத்து போட்ட விஜய் !

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆடியோ ரிலீஸ் எப்போது, டிரைலர் லான்ச் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக இருக்க, இப்போது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செம்ம வெயிட்டான தகவல் வந்திறங்கியுள்ளது.

ஆம், மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வேற லெவலில் உருவாகி வருகிறதாம். இந்த பாடலை அனிருத் செம்ம குத்து பாடலாக உருவாக்கியுள்ளாராம். இந்த பாடலில்  100-க்கும் மேற்பட்ட டான்ஸர்கள் விஜய்யுடன் நடனமாடுகிறார்களாம்.

மேலும், விஜய் ரசிகர்களுக்காகவே பிரத்யேகமான ஃபேன் மூமென்ட் ஒன்று உருவாகியுள்ளது. ஆம், விஜய் சிங்கிள் டேக்கில் செம்ம குத்து டான்ஸ் போட்டுள்ளாராம். எனவே எப்போதையும் விட மாஸ்டர் படத்தில் டான்ஸ் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.