1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 4 மார்ச் 2020 (19:59 IST)

மாஸ்டர் புக்கிங் ஓபன்... எங்கு தெரியுமா..? உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான குட்டி கதை சிங்கிள் பாடல் தற்போது வரை 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு சற்றும் எதிர்பாராத வகையில் வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில்  இப்படத்தின் புக்கிங்கை பிரான்ஸில் ஓபன் செய்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனவே கூடிய விரைவில் தமிழகத்திலும் புக்கிங் ஓபன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.