புதன், 18 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜனவரி 2026 (19:16 IST)

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

ajith car race
நடிகர் அஜித் சமீப காலமாகவே தொடர்ந்து கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார். சினிமாவில் கூட அவர் நடிப்பதில்லை. குட் பேட் அக்லி படம் வெளியாகி பல மாதங்களாகியும் அவரின் அடுத்த படம் இன்னமும் துவங்கப்படவில்லை. துபாயில் நடந்த முதல் கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு மூன்றாம் பரிசை வென்றது. அதன்பின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது. மேலும், மலேசியாவில் சில நாட்கள் போட்டி நடந்தது. தற்போது துபாயில் நடந்து வருகிறது.

இந்த எல்லா போட்டிகளிலும் அஜித் தனது டீமுடன் பங்கேற்றார் .இது தொடர்பான புகைப்படங்களை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில்தான் சமீபத்தில் சிம்பு, ஜிவி பிரகாஷ் அனிருத், சிபிராஜ் உள்ளிட்ட பலரும் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று அஜித்தை நேரில் சந்தித்தார்கள்.

இது தொடர்பான புகைப்படங்களை ஏற்கனவே வெளியாகின, அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று அஜித்தை சந்தித்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பிரபலங்களை அஜித்தே வரவழைத்து அவர்களை சந்திக்கிறார் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகும் போது மக்களிடம் கார் ரேஸ் எளிதில் ரீச் ஆகும் என அஜித் நினைக்கிறாராம்.