புதன், 18 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜனவரி 2026 (19:05 IST)

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

nayanthara
கேரளாவை சேர்ந்த நயன்தாரா ஹரி இயக்கிய ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதன்பின் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. அஜித்துடன் நடித்த பில்லா உள்ளிட்ட சில படங்கள அவருக்கு கை கொடுத்தது. ஒருபக்கம் ஆந்திராவுக்கு போய் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார்.

ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியதோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உருவெடுத்தார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அப்பட இயக்குனர் விக்னேஷ் அவனை காதலித்து சில வருடங்களுக்கு பின் திருமணம் செய்து கொண்டார். அதோடு வளர்ப்பு தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் தாயாகியிருக்கிறார்.

ஏற்கனவே நயன்தாராவுக்கு சென்னையில் ஒரு சொந்த வீடு இருக்கிறது. ஒரு பக்கம் போயஸ்கார்டனில் பலகோடி செலவில் ஒரு புதிய வீட்டையும் அவர் கட்டி வருகிறார். இந்நிலையில்தான் துபாயில் உள்ள புர்ஜ்கலிபா டவரில் ஒரு புது வீடு வாங்கி இருக்கிறார் நயன்தாரா.

அந்த வீட்டில்தான் சமீபத்தில் நயன்தாரா, அவரின் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களின் குழந்தைகள் என எல்லோரும் பொங்கல் விழாவை கொண்டாடியிருக்கிறார்கள். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி துபாய்க்கு செல்வதற்கான பின்னணி இதுதான் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.