1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Master released in OTT as uncut version

அமேசானில் சென்சார் இல்லாத ‘மாஸ்டர்’ வெளியாகிறதா?

‘மாஸ்டர்’
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நாளை அதாவது ஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்த படம் ரிலீஸான 16 நாட்களில் அமேசானில் வெளியாக இருப்பது திரையுலகினரை சலசலப்பை ஏற்படுத்தினாலும் நஷ்டத்தை தவிர்க்கவே அமேசானில் கூடுதல் தொகையை வாங்கி தயாரிப்பாளர் இந்த படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் ‘மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்ட திரைப்படமாக வெளியானது என்பதும் அதில் பல முக்கிய காட்சிகளை சென்சார் அதிகாரிகள் கட் செய்து விட்டார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் அமேசானில் நாளை வெளியாக இருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் இல்லாத எந்தவித ’கட்’டும் இல்லாத திரைப்படமாக வெளியாக இருப்பதாகவும் இதனால் திரையரங்குகளில் பார்க்காத ஒரு சில காட்சிகளை ஓடிடியில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது 
 
இதனால் ஏற்கனவே திரையரங்குகளில் படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் நாலை அமேசானில் இந்த படத்தை பார்க்க முன்வருவார்கள் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளை அமேசானில் திரைப்படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்வோம்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
அரசியலில் இந்த நாகரிகம் பரவட்டும் – வைரமுத்து அறிவுரை