செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (11:12 IST)

இவ்வளவு சீக்கிரமாக மாஸ்டர் ஓடிடி ரிலிஸ் ஏன்?… பின்னணியில் நிகழ்ந்த குளறுபடிகள் இதுதான்!

மாஸ்டர் திரைப்படம் நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ள நிலையில் அதன் பின்னால் நிகழ்ந்த சில குளறுபடிகள் பற்றி திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியில் வெளியாக உள்ளதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்களை நிலை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேல் பூட்டப்பட்டிருந்த திரையரங்கில் ஒளியை ஏற்றி வைத்தது போல் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்தது என்பதும் இந்த படத்தின் காரணமாக நஷ்டத்தில் இருந்த திரையரங்கு உரிமையாளர்கள் மீண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடினாலும், சரியானக் கணக்கு விவரங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு காட்டப்படவில்லை என சொல்லப்படுகிறது. அதனால்தான் கடுப்பான மாஸ்டர் படக்குழு ஒப்பந்த தேதிக்கு முன்னதாகவே அமேசான் ப்ரைம் தளத்தில் திரையரங்கில் படம் ஓடிக்கொண்டு இருக்கும்போதே ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாம்.