1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 ஜனவரி 2021 (19:33 IST)

ஓடிடியில் ‘மாஸ்டர்’: திரையரங்கு உரிமையாளர்களின் நிலை என்ன?

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியில் வெளியாக உள்ளதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்களை நிலை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேல் பூட்டப்பட்டிருந்த திரையரங்கில் ஒளியை ஏற்றி வைத்தது போல் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்தது என்பதும் இந்த படத்தின் காரணமாக நஷ்டத்தில் இருந்த திரையரங்கு உரிமையாளர்கள் மீண்டனர் என்பதும் தெரிந்ததே
 
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் மாஸ்டர் படத்தால் பெரும் லாபம் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸான 16 நாட்களில் ரிலீஸ் ஆவதால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தங்களுக்கு தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வதந்திகளை கிளப்பி வருகின்றனர்
 
ஆனால் பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்களின் எண்ணம் என்னவென்றால் இந்த படத்தின் மூலம் நாம் நல்ல லாபத்தை பெற்று விட்டோம், தயாரிப்பாளரும் கூடுதலான லாபத்தை பெற வேண்டும் என்பதற்காக ஓடிடி முடிவை எடுத்துள்ளார்ம் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று தான் கூறி வருகின்றனர் 
 
ஆனால் இந்த உண்மையை மறைத்து ஒரு சிலர் வேண்டுமென்றே திரையரங்கு உரிமையாளர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக வதந்தியை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது