வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (14:11 IST)

சமந்தா கணவருடன் சாய்பல்லவி நடித்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி நடித்த தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சேகர் கம்முலா என்பவர் இயக்கிய லவ் ஸ்டோரி என்ற படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது 
 
மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
சமந்தா கணவருடன் சாய்பல்லவி நடித்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இதே நாளில்தான் நானி நடித்த ஒரு திரைப்படமும் வெளியாக உள்ளது என்பதும் இரண்டு படங்களும் ஒரே நாளில் மோத உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. லவ் ஸ்டோரி படத்தில் காலா நடிகை ஈஸ்வரி ராவ் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்