வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (19:48 IST)

திருமணத்திற்கு முன் வேறு பெண் மீது காதல்: கஷ்டப்படும் சமந்தா!

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். சமந்தா திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். 
 
சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவின் குடும்பத்தின் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சினிமாவில் இருப்பதால் குடும்பம் மற்றும் சினிமாவை சமாளிப்பது எளிதாக உள்ளது என சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் அவர், தனது கணவருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மஜிலி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. 
 
நாக சைதன்யாவுக்கு சிறு வயதில் ஒரு காதலி இருந்து அந்த காதல் முறிந்து சமந்தாவை திருமணம் செய்துகொள்கிறார். நாக சைதன்யாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல், சமந்தாவுடன் வாழ மறுக்கிறார். இருப்பினும் சமந்தா நல்ல மனைவியா இருந்து வருகிறார் என்பது போல இந்த டீசர் அமைந்துள்ளது. 
 
இதோ அந்த டீசர் உங்கள் பார்வைக்கு...