1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 பிப்ரவரி 2019 (16:10 IST)

தேனடைக்கு கல்யாணம்!! மாப்பிள்ளை இவர்தானாம்

பிரபல காமெடி நடிகை மதுமிதாவிற்கு நாளை மறுதினம் திருமணம் நடைபெற இருக்கிறது.
 
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானத்தின் காதலியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலாமனவர் நடிகை மதுமிதா. அதன் பின் அவர் பல திரைப்படங்கள் உட்பட சின்னத்திரையில் பல தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் மதுமிதாவிற்கு பிப்ரவரி 15 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மதுமிதா அவரது  தாய்மாமா மகன் மோசஸ் ஜோயல்லை திருமணம் செய்ய இருக்கிறார். சென்னையில் இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடக்க இருக்கிறது.