வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (17:09 IST)

கணவரை விவாகரத்து செய்தார் பிக்பாஸ் நடிகை.. இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
விஜய் நடித்த வாரிசு உள்பட சில திரைப்படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். இவர், தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
 
சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த சம்யுக்தா, நடிகை ராதிகா இயக்கத்தில் உருவான சந்திரகுமாரி என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வாரிசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.
 
இந்த நிலையில், தொழிலதிபர் கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சம்யுக்தாவுக்கு ராயன் என்ற மகன் உள்ளார். தற்போது, தனது கணவரை விவாகரத்து செய்ததாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும், "விவாகரத்து தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். இப்போதுதான் உண்மையாக நான் வலிமையாக இருப்பதாக உணர்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக, தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக நடிகை சம்யுக்தா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran