1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (15:58 IST)

ரெடியா இருங்க மக்களே… ஸ்க்விட் கேம்ஸ் சீசன் 2 வின் டீசர் ரிலீஸ்!

கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டது.

இந்த தொடர் குறித்து பேசிய நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். வெளியானதில் இருந்து சுமார் 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இப்போது இரண்டாம் சீசனின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. முதல் சீசனில் விளையாடி பணத்தை வென்ற நபர் மீண்டும் அதே விளையாட்டை உள்ளே வர என்னென்ன திருப்பங்கள் நடக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.