வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (13:53 IST)

சிவகார்த்திகேயன் – ராஜேஷ் காம்போ கம்பேக் கொடுக்குமா ? : மிஸ்டர் லோகல்ஸின் டீசர் !

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் மிஸ்டர் லோகல் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் வேலைக்காரன் மற்றும் சீமராஜா தோல்விகளாலும் எம் ராஜேஷ் ஹிட்களைப் பார்த்தே பல வருடங்கள் ஆகியுள்ள நிலையிலும் இருவரும் இணைந்து ஒருப் புதிய படத்தில் இணைந்திருக்கும் சூழலில் இன்று வெளியாகியிருக்கிறது மிஸ்டர் லோகல் படத்தின் டீசர்.

வழக்கமாக எம் ராஜேஷ் படங்களில் ஹீரோ, ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு கதாநாயகி … அப்புறம் ஹீரோவுக்கு இன்னொரு ஜோடியாக ஹீரோவின் பிரண்ட்…ஹீரோ பிரண்ட்டையும் ஹீரோயினையும் கலாய்க்க ஹீரொயின் ஹீரோவைக் கலாய்க்க… ஹீரோவின் பிரண்ட் இரண்டு பேரிடம் பல்ப் வாங்க… அப்புறம் ஹீரோ – ஹீரோயின் காதல்… அப்புறம் பிரிவு… அப்புறம் க்ளைமேக்ஸ் என ஒருமாதிரியாக முடிந்துவிடும். ஆனால் இந்த விஷயங்களுக்குள்ளாகவே ஆடியன்ஸை சீட்டை விட்டு துள்ளிக் குதித்து சிரிக்க வைக்கும் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டிவிடுவார் ராஜேஷ்

அதே டெம்ப்ளேட்டில் இம்மியளவுக் கூட பிசகாமல் இன்று வெளியாகியிருக்கிறது மிஸ்டர் லோகல் டீசர். சிவகார்த்திக்கேயனுக்கும் நயன்தாராவுக்கும் இடையிலான மோதல் அப்புறம் காதல் இடையில் சதீஷ் சொல்லும் (ஆமாம் சொல்லும்) ஸ்டேஜ் காமெடிகள் என வண்ணமயமாக இருக்கிறது. ஆனால் கொஞ்ச காலமாக அவுட் டேட்டாக இருக்கும் ராஜேஷின் இந்த டெம்ப்ளேட் இந்த முறை வொர்க் அவுட் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.