வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (12:53 IST)

தெலுங்கில் டப்பிங் செய்து சீமராஜா வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 300 திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.


 
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் சீமராஜா. இதில் சிவகார்த்திகேயனுடன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோ தயாரித்து இருந்தது. தமிழகத்தில் கிராம புறங்களில் வரவேற்பை பெற்ற இப்படம், ஒட்டுமொத்தமாக  பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.  இந்நிலையில் சீமராஜா திரைப்படம் அதே பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 300 திரையரங்குகளில் நேற்று வெளியிடப்பட்டது.    சீமராஜா திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை ஸ்ரீ கிருஷ்ணா பண்டியாலா வாங்கியுள்ளார். அவர் தான் தெலுங்கில் வெளியிட்டுள்ளார்.
 
ஏற்கனவே சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது நல்ல வரவேற்பை  பெற்றது. முதல் வாரத்தில் 3 கோடி ரூபாய் வரை கலெக்சனை அள்ளியது. அதை மனதில் கொண்டே தெலுங்கில் சீமராஜா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சன்டிவியில் புத்தாண்டை முன்னிட்டு சீமராஜா வெளியிடப்பட்ட போது  21.52  ரேட்டிங் பெற்று இந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற படம் என்ற சாதனையை சீமராஜா படைத்தது குறிப்பிடத்தக்கது.