அஜித் பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் படம்

Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (19:10 IST)
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள Mr.லோக்கல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று 7 மணிக்கு அறிவிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது
இந்த நிலையில் சரியாக 7மணிக்கு இந்த படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும் மே 1ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் 'வேலைக்காரன்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :