அஜித் vs சிவகார்த்திகேயன் – சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மோதல்

Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:03 IST)
வரும் மே 1 ஆம் தேதி அஜித் நடிப்பில் உருவாகும் அஜித் 59 மற்றும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ஆகியப் படங்கள் வெளியாக இருப்பதால் சமூக வலைதளங்களில் மோதல் போக்கு உருவாகியுள்ளது.

விஸ்வாசம் படத்தின் விஸ்வரூப வெற்றியை அடுத்து அஜித் தனது அடுத்தப்படமாக ஹெச் வினோத் இயக்கும் இந்தி பிங்க் படத்தின் ரீமேக்கில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அஜித் 59 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் பூஜையன்றே படம் அஜித் பிறந்தநாளான மே 1- ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காகப் படக்குழு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது அஜித் படம் வெளியாகும் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படமும் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் உள்ள் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகியுள்ளது.


சமீபத்தில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் இரண்டும் ஒரே நாளில் வெளியானது. சூபபர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தைவிட விஸ்வாசம் தமிழகத் திரையரங்குகளில் நல்ல வசூலை ஈட்டியது. அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன்பாக கமலின் தூங்காவனத்தோடு ரிலிஸான வேதாளம் படம் பெருவெற்றிப் பெற்றது. அந்த இரண்டு சம்பவங்களையும் முன்னிறுத்தி ரஜினி, கமலையே பார்த்தாச்சு… சிவாகார்த்திகேயனெல்லாம் எந்த மூலையென்று அஜித் ரசிகர்கள் சீற ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து சிவகார்த்திக்கேயனுக்கு ஆதரவாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களும் களமிறங்கி அஜித் மற்றும் அஜித் ரசிகர்களைக் கலாய்த்து வருகின்றனர். வழக்கமாகப் பட ரிலிஸ் அல்லது டிரைலர் ரிலிஸ் போன்ற நிகழ்ச்சிகளின் போது ரசிகர்கள் மோதிக்கொள்வது வழக்கமானது. ஆனால் இம்முறை ரிலிஸ் தேதிக்கே மோதிக்கொள்ளும்படியான சூழ்நிலை உருவாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :