1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (16:43 IST)

இளைஞர்களின் ரீசன்ட் Crush இவானா பொலிவான அழகை பெற என்ன சேகர் தெரியுமா?

கேரளாவை சேர்ந்த 22 வயது நடிகையான இவானா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  மலையாளத் திரையுலகில் குழந்தை நடிகையாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தமிழில் நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். 
 
அந்த படத்தில் ஜோதிகாவை விட இவானாவுக்கு தான் அதிக ஸ்கோப் கிடைத்தது. அதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றார். அதன் பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக LGM என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் எப்போதும் சருமம் பொலிவாக வைத்திருக்க  2 வேலை ஜுஸ், நிறைய பழங்கள் போன்றவற்றை எடுத்து கொள்வாராம். அதே போன்று முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி இலை, ஊற வைத்த வெந்தயம் சேர்த்து நன்கு அரைத்து அதை முடி முழுவதும் பூசி 30 நிமிடம் கழித்து ஹேர் வாஷ் செய்வாராம்.
 
மேலும் தலையை வாஷ் செய்யும் போது கட்டாயம் 2 வகையாக ஹேர் பேக்கை போடுவாராம். தயிர், கற்றாழை ஜெல், சின்ன வெங்காய சாறு சேர்ந்து நன்கு மிக்ஸ் செய்து அந்த பேஸ்ட்டை ஹேர் பேக்காக பயன்படுத்துவாராம். இது தான் அவரை அழகாக வைத்திருக்க உதவுகிறதாம்.