1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (08:18 IST)

அந்த காட்சியை நீக்கியது தவறு: வருந்தும் லோகேஷ்!!

மாஸ்டர் படத்தின் காட்சியை நீக்கியது குறித்து மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். 

 
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 15 நாட்களுக்குள் அமேசான் ஓடிடி ப்ரைம் தளத்தில் வெளியானது.
 
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளை இப்போது இணையத்தில் வெளியிட்டனர். ஆனால் எதிர்பார்ப்பை விட அந்த காட்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதை நீக்கி இருக்க வேண்டாமே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 
 
இதனிடையே இந்த காட்சியை நீக்கியது குறித்து மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மாஸ்டர் படத்தில் டெலிட் காட்சியை நீக்கியது மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு. அந்த காட்சியை நீக்காமல் படத்தில் வைத்திருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.