புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (23:34 IST)

‘அருண்விஜய் 33’ படத்தின் இசையமைப்பாளர் யார்?

நடிகர் அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் நாயகி உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து உள்ளனர் என்பதும் தெரிந்தது 
 
அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா, ஜெயபாலன், புகழ் உள்பட பல நடிகர் நடிகைகள் இணைந்து உள்ளனர் என்ற செய்தியைப் பார்த்தோம் 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. சற்றுமுன் அருண் விஜய் தனது டுவிட்டரில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது நாளை முறைப்படி அறிவிக்கப்படும் என்று ட்விட் செய்துள்ளார். எனவே நாளை அறிவிக்கப்படும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது