திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 ஜூன் 2023 (09:12 IST)

விஜய்யின் லியோ திரைப்படத்தில் 2 வாரங்கள் தள்ளிபோகும் பிருத்விராஜ் படம்!

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் விரைவில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன் பின்னர் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து அக்டோபர் 19 ஆம் தேதி இந்த படம் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் தென்னிந்தியா முழுவதும் அதிக திரைகளில் ரிலீஸாகிறது. கேரளாவில் விஜய்க்கு அங்குள்ள மலையாள நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தை கிட்டத்தட்ட 15 கோடிக்கு வாங்கியுள்ள கேரள விநியோகஸ்தர் அங்கு அதிக திரைகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதனால் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாக இருந்த பிருத்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படம் இரண்டு வாரங்களுக்கு பிறகு ரிலீஸாக திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.