1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Vijay 68 movie shooting start update

விஜய் 68 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

விஜய்
விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் லியோ படத்தின் ஷுட்டிங்கை இன்னும் சில நாட்களில் முடிக்க உள்ளார்.

அதனால் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட்டில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
போர்த் தொழில் படத்தின் தெலுங்கு ரீமேக்… வலைவிரிக்கும் அல்லு அர்ஜுன்!