வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 ஜூன் 2023 (09:04 IST)

வடிவேலு குரலில் ரஹ்மானின் சின்ன சின்ன ஆசை பாடல்… டிவிட்டரில் வைரலாகும் வீடியோ!

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். படம் ஜூன் மாதம்  29 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

படத்தில் மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நகைச்சுவை வேடமாக இல்லாமல் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் வடிவேலு.

இந்நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பற்றி பேசிய போது அவரின் முதல் படமான ரோஜா படத்தில் இடம்பெற்ற “சின்ன சின்ன ஆசை” பாடலை தன் ஸ்டைலில் பாடிக்காட்டினார். இது சம்மந்தமான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.