வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (19:21 IST)

''சாதிப் பெயர்கள் கொண்ட பாடல்களுக்கு தடைவிதிக்க வேண்டும்''- பிரபல இயக்குனர்

Shooting
சாதிப் பெயர்கள் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசைப்பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கியில் பொதுவிடத்தில் ஒலிப்பரப்பத் தடைவிதிக்க வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலினிடம்  கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனர் சீனு ராமசாமி. இவர்,  கூடல் நகர், தென்மேற்கு பருவக் காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுறை, கண்ணே கலைமானே மற்றும் மாமனிதன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில்,  சினிமா இயக்குவது மட்டுமின்றி, கவிதை எழுவதும், சமூக கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இயக்குனர் சீனு ராமசாமி, சாதிப் பெயர்கள் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசைப்பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கியில் பொதுவிடத்தில் ஒலிப்பரப்பத் தடைவிதிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’தமிழகத்தில்  சாதியின் பெயர் கொண்ட பாடல்கள்  சினிமா & தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
 

எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம்  மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை +தடை விதித்தல் செய்திட மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.