வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (21:08 IST)

''விஜய் #NaaReady பாடல் நடனத்தில் 45 செகண்ட் சிங்கிள் டேக் ''.. அசந்துட்டேன்- மன்சூர் அலிகான் டுவீட்

மன்சூர் அலிகான் இன்று நடிகர் விஜய்யின்  நடனத்தைப் பாராட்டி ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை செவன் கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தில், திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மன்சூர் அலிகான், சஞ்சய் சத், அர்ஜூன்  உள்ளிட்ட நடிகர்கள் வில்லன்கள் வேடத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில்  ரிலீஸாகவுள்ளது.

கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி, லியோ படத்தின் முதல் சிங்கில் நா ரெடி என்ற பாடல் வெளியாகி இரண்டு நாட்களில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பார்வைகயாளர்களுடன் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில்,  இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ள மன்சூர் அலிகான் இன்று நடிகர் விஜய்யின்  நடனத்தைப் பாராட்டி ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’அன்பு தம்பி விஜய் #NaaReady Song 45 Sec சிங்கள் டேக்  டான்ஸ் கவர் பணியிருக்காரு நானா அசந்து போய்ட்டேன் தியேட்டர் தெறிக்க போது Big Treat Fans’’ என்று தெரிவித்துள்ளார்.