செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (16:20 IST)

நெகட்டிவ் விமர்சனத்தில் வசூலில் சாதனை செய்யும் ‘லியோ’: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

vijay- lokesh kanakaraj
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் குவிந்து வந்தாலும் இந்த படம் வசூலில் சாதனை செய்து வருகிறது.

லியோ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 38 கோடி வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 132 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் நாளில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை
 பெற்றுள்ளது

மேலும் இங்கிலாந்தில் மட்டும் இந்த படம் 5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் 16 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் ஆயுத பூஜை விடுமுறை தினங்கள் இருப்பதால் இந்த படம் ஓபனிங் வசூல் சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva