1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (12:40 IST)

#Ganapath :பாலிவுட் படக்குழுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

ganapath
இந்தி சினிமாவின் பிரபல நடிகர் டைகர் ஷெராப். இவர் நடிப்பில் உருவாகியுள்ள கணபத் என்ற படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இப்படக்குழுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்தி சினிமாவில் பிரபல நடிகர் டைகர் ஷெராப். இவர் அமிதாப் பச்சன், கீர்த்தி சனோன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் கணபத்.

ரூ.200 கோடி  பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை விகாஷ் பாய் எழுதி, இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு விஷால் மிஸ்ரா, அமித் திரிவேதி ஆகியோர் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது. இப்படம் வெற்றியடைய படக்குழுவுக்கு தன் வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.