1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (08:39 IST)

இதுதான் LCU வா?... லியோ படத்தை பார்த்து கடுப்பான ரசிகர்கள்!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்த விஜய் நடித்துள்ள லியோ படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. அண்டை மாநிலங்களில் காலை ஐந்து மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்டன. அதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து LCU வில் வருமா வராதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் நேற்று படம் ரிலீஸாகி ரசிகர்கள் பார்த்துள்ள நிலையில் சில வாய்ஸ் ஓவர்களையும், ஒரு சின்ன கதாபாத்திரத்தையும் விக்ரம் மற்றும் கைதி படத்தில் இருந்து லியோ படத்தில் இறக்கிவிட்டு இதுதான் LCU என ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் லோகேஷ்.

படத்தின் இறுதியில் வரும் கமல்ஹாசனின் குரல் ஒரு சாதாரணமான 20 நொடி வசனத்தை பேசி செல்கிறது. அதுபோல கைதி படத்தில் இடம்பெற்ற நெப்போலியன் கதாபாத்திரம் அதே கதாபாத்திரத்தில் வருகிறது. இவை மட்டுமே லோகேஷின் மற்ற படங்களோடு லியோவுக்கு உள்ள சம்மந்தம். இதனால் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளதாக சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.