லியோ திரைப்படத்தின் முதல் நாள் அமெரிக்க வசூல் இவ்வளவா?
லியோ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்த விஜய் நடித்துள்ள லியோ படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. அண்டை மாநிலங்களில் காலை ஐந்து மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்டன. அதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டன.
இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து LCU வில் வருமா வராதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் நேற்று முழுவதும் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி ஹவுஸ்புல் காட்சிகளாக லியோ ஓடியது.
இந்நிலையில் அமெரிக்காவில் முதல் நாளில் மட்டும் இந்த படம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது