1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (11:11 IST)

'வலிமை’ முதல் நாள் வசூலை முறியடித்த ‘லியோ’: எவ்வளவு வசூல்

லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.132 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படம் 'வலிமை’ முதல் நாள் வசூலை முறியடித்ததாக கூறப்படுகிறது.
 
நேற்று வெளியான ‘லியோ’ தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.38 கோடி வசூலித்துள்ளதாகவும், ரூ.132 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் முதல் நாளில் ’வலிமை’ படத்தின் தமிழக வசூல் ரூ.36 கோடி என்ற நிலையில் ‘லியோ’ முறியடித்துள்ளதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
இருப்பினும் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வ வசூல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva