வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 அக்டோபர் 2020 (15:48 IST)

’’தகுதியில்லாமல் பதவிக்கு வந்த மோசமானவர்’’….முதல்வரை விமர்சித்த முன்னணி நடிகை !

மராட்டிய முதல்வரை தகுதியில்லாமல் பதவிக்கு வந்த மோசமானவர் என விமர்சித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.

சுஷாந்த் மரணம் தொடர்பான கருத்துகள், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு சிவசேனாவுடன் மோதல் என பாலிவுட்டில் இப்போது கங்கனா மோதாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு எல்லோருடனும் சண்டை போட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி விதிகளை மீறி கங்கனாவின் அலுவலகம் கட்டப்படுவதாக மும்பை நகராட்சி கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்தது.

சமீபத்தில்  மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீதும் அவர் சகோதரி மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது..

இந்த வழக்கை விசாரித்த மும்பை பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட், நடிகை  கங்கணா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது .

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தற்போது மராட்டிய முதல்வர்  உத்தவ் தாக்கரேவை விமர்சித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்ட மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, நடிகை கங்கனா ரணாவத்தின் சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் கஞ்சா அதிகம் விளைகிறது எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நடிகை கங்கனா. அப்பாவின் சொத்துகளையும் பதவிகளையும் அனுபவித்தவள் நானில்லை…மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே வாரிசு அடிப்படையில் வந்த தகுதியில்லாவர் என்று தெரிவித்துள்ளார்.