செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (18:29 IST)

சிறுவனுக்கு லிப் கிஸ் கொடுத்து சர்ச்சை கிளப்பிய கங்கனா ரனாவத்!

ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' என்ற தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருகிறார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது.
 
அதையடுத்து பெரும் பிரபலமான நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தார். கூடவே நிறைய சர்ச்சைகளில் சிக்கி அவ்வப்போது விமர்சனத்திற்கு உள்ளாவார். பாலிவுட் திரை நட்சத்திரங்களை வெளிப்டையாக வெளுத்து வாங்கும் கங்கானாவை ஒன்று கூடி அனைவரும் வெறுப்பது மக்களுக்கு தெரியும். 
 
இருந்தும் தனக்கு கிடைக்கும் படவாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் சிறுவன் ஒருவனுக்கு உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.